Saturday , June 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சிறுபான்மை சமூகம் தாக்கப்படும்போது பெரும்பான்மை சமூகம் இரசிக்கிறது

சிறுபான்மை சமூகம் தாக்கப்படும்போது பெரும்பான்மை சமூகம் இரசிக்கிறது

கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அண்மையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களுக்கும் வணக்கஸ்தலங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டமை, பெரும்பாலான சிங்களவர்களுக்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்தியுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு பெரும்பாலான சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. எனினும், அதில் எவ்வித உண்மையும் இல்லை.
1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் போதும் பெருமளவான சிங்களவர்கள் மகிழ்ச்சியுற்றனர்.

அரேபிய கலாசாரத்தை சில முஸ்லிம்கள் பின்பற்றுவதால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்திற்குள் அவர்கள் தள்ளப்படுகின்றனர். முஸ்லிம்களால் நடத்தப்படும் சிறு பாடசாலைகளுக்கே முஸ்லிம் பெண் பிள்ளைகள் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இவ்விடயங்கள் தொடர்பாக முஸ்லிம் சமூகம் சிந்தித்து, உண்மையை உணர்ந்து, இலங்கை தேசத்திற்குள் அவர்கள் ஒன்றுபடுவது அவசியம்.

அதே சந்தர்ப்பத்தில், நாட்டிலோ உலகத்திலோ கலப்பின்றி தனியாக எந்தவொரு சமூகமும் இல்லையென்பதை சிங்களவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புவதாகவும் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …