தேர்தலில் களமிறங்கவுள்ள முன்னாள் இராணுவத்தளபதி!
முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதான கட்சி ஒன்று அவரை சுயாதீனமாக வேட்பாளராக இறக்குவது குறித்து கலந்துரையாடிவருகின்றதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
இதேவேளை பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷவின் வாக்குகளை குறைக்கச் செய்யும் வகையில் மகேஸ் சேனநாயக்கவை களமிறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிகபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.