நாட்டின் சிறந்த எம்.பி.யாக கோல்ஹாபூர் மக்களவை தொகுதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனஞ்ஜெய் மஹதிக் தேர்வு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தம் 792 எம்.பி.க்கள் உள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரின்பொழுது பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்படும்.
இந்த நிலையில், நாடாளுமன்ற மதிப்பீட்டு அமைப்பு என்ற குழு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நாட்டின் சிறந்த எம்.பி.யாக கோல்ஹாபூர் மக்களவை தொகுதியை சேர்ந்த தனஞ்ஜெய் மஹதிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தொடரின்பொழுது, உள்ளூர் மற்றும் மாநில பிரச்னைகள் மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விவகாரங்களை திறம்பட எழுப்பியுள்ளார் மஹதிக்.
கடந்த 3 வருடங்களில் அவர் பல்வேறு விவகாரங்களுக்காக மொத்தம் 704 கேள்விகளை எழுப்பியுள்ளார். அவற்றினை மத்திய அரசு கவனத்தில் எடுத்து கொண்டுள்ளது. அதனுடன் பெருமளவிலான திட்டங்கள் நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டுள்ளன.
அவற்றில் பஞ்சன்கங்கா சூழல் சீர்கேடு, கொங்கன் ரெயில்வே, கிராம பகுதிகளில் சாலை கட்டமைப்பு, நகரில் பாலம் கட்டும் திட்டம் மற்றும் பிற விசயங்களும் அடங்கும்.