கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மகாதேவா சிறுவர் இல்லத்தில் தற்போது ஏற்பட்டுள்ள திடீர் குழப்ப நிலை தொடர்பில் ஆராய்ந்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண சபையின் 111ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் இடம்பெற்றது. இந்த அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பி னர் ஜெயசேகரம் மகாதேவா சிறுவர் இல்லத்தில் உள்ள திடீர் குழப்பநிலை தொடர்பில் மாகாண சபை தலையிட்டு பிரச்சினையைத் தீர்க்க வலியுறுத்தி பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார்.
பிரேரணையை வழிமொழிந்த அரியரட்ணம் கருத்துத் தெரிவிக் கும் போது:கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 366 பிள்ளைகள் வரையில் பராமரிப்பில் உள்ளனர். அங்குள்ள ஒரு பிள்ளையின் ஒருநாள் உணவுக்கு மாத்திரம் 200 ரூபாய் வரையில் தேவைப்படுகின்றது. சிறுவர் இல்லத்துக்கான நிதி உள்ளூர் மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து கிடைக்கின்றது.
ஆனால் அதன் தலைவர் இறந்ததும் தற்போது அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே மாகாண அமைச்சர்கள் நேரடியாகச் சென்று அதனை ஆராய வேண்டும் –என்றார்.அதன் பின்னர் கருத்து தெரிவிக்கும்போது அவைத்தலைவர் குறிப்பிட்டதாவது:மகாதேவா சிறுவர் இல்லத்தில் ஏற்பட்டுள்ள திடீர் குழப்பநிலை தொடர்பில் சுகாதார அமைச்சர் குணசீலன் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி ஆகியோர் இணைந்து ஆராயுங்கள்.