Saturday , November 16 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / கொரோனா பயத்தில் லண்டனில் மூடப்பட்ட நிறுவனம்!

கொரோனா பயத்தில் லண்டனில் மூடப்பட்ட நிறுவனம்!

கொரோனா பயத்தில் லண்டனில் மூடப்பட்ட நிறுவனம்!

லண்டனில் உள்ள ஒரு அலுவலகத்தில் ஊழியர் ஒருவரால் கொரோனா பீதி ஏற்பட்ட நிலையில் அந்த அலுவலகம் உடனடியாக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு பணிபுரியும் 300 ஊழியர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

லண்டனின் Canary Wharf பகுதியில் செயல்பட்டு அமெரிக்க எண்ணெய் நிறுவனமான Chevronல் பணிபுரியும் ஊழியருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குறித்த ஊழியர் கொரோனா பாதிப்பு உள்ள நாட்டிலிருந்து சமீபத்தில் லண்டனுக்கு திரும்பியது தெரியவந்தது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு அங்கு பணிபுரியும் 300 ஊழியர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட நபரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரை அவர் வீட்டிலிருந்து பணிபுரிய அலுவலகத்தின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை அபாயத்தை குறைக்கவே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கு இத்தாலிக்குப் பயணம் மேற்கொண்டவர்கள் இங்கிலாந்து திரும்பும்போது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களைத் தனிமைப்படுத்தவேண்டும் என பிரித்தானிய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் செஷயரில் இரண்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் . மேலும், பல ஊழியர்களும் மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் 322 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் அங்கு வைரஸ் பாதிப்பு 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv