Wednesday , October 15 2025

ஆயுள் தண்டனை

தெஹிவளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அத்தியட்சர் சுனில் அப்ரூவைக் கொலை செய்த குற்றத்தின் பேரில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
நீண்ட கால விசாரணைகளையடுத்தே உயர் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இத்தீர்ப்பை வழங்கினார்.

சுனில் அப்ரூ 2003ஆம் ஆண்டு தெஹிவளை பொலிஸ் நிலையத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது குறித்து அவரது தரப்பில் வழக்குப் பதியப்பட்டதுடன், குற்றவாளியே இக்கொலையின் சூத்திரதாரி என்பதையும் ஆதாரங்களுடன் நிரூபித்திருந்தனர்.

இதையடுத்து, குற்றவாளி மீதான குற்றம் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …