Thursday , November 21 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / மக்களவையில் எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது

மக்களவையில் எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது

மக்களவையில் எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது

நீண்ட காலம் இழுபறியாக இருந்த எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா, இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் சொத்துகள் எதிரி சொத்துகள் என்று நிர்ணயிக்கப்பட்டு எதிரி சொத்து சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சொத்துகளை அவற்றை நிர்வகித்து வருபவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு அவசரச் சட்டம் கொண்டு வந்தது.

அதேசமயம், அதனை நிரந்தர சட்டமாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் அதில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வந்ததால் நிறைவேறுவதில் இழுபறி ஏற்பட்டது. எனவே, எதிரி சொத்து அவசர சட்டம் தொடர்ந்து மறுபிரகடனம் செய்யப்பட்டு வந்தது.

எதிரி சொத்து சட்ட மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சில திருத்தங்களுடன் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாநிலங்களவையில் இருந்து இறுதி ஒப்புதலுக்காக மீண்டும் மக்களவைக்கு அந்த மசோதா கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், எதிரி சொத்து அவசர சட்டம் இன்றுடன் காலாவதியாவதால், இன்று பிற்பகல் மக்களவையில் எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விவாதத்தற்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்ததும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய …