Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மன்செஸ்டர் குண்டுத் தாக்குதல்: இலங்கை அரசாங்கம் கண்டனம்

மன்செஸ்டர் குண்டுத் தாக்குதல்: இலங்கை அரசாங்கம் கண்டனம்

பிரித்தானியாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியா மன்செஸ்டர் பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகிஷினி கொலன்ன தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் மூலமே இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகிஷினி கொலன்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …