Wednesday , February 5 2025
Home / சினிமா செய்திகள் / வெளியேறினார் லட்சுமி!

வெளியேறினார் லட்சுமி!

செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இருந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியேறுவது போல் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷண் ஜீ. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பல வருடங்களாக நடத்தி வருகிறார்.

குடும்பத்தில் உள்ள பிரச்சினை, பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என அனைத்தும் அந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கு பெறும் நபர்களுக்கு தன்னுடைய அறிவுரைகளை லட்சுமி ராமகிருஷ்ணன் வழங்குகிறார்.

இதில் அவர் பேசும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’, ‘போலீசுல பிடிச்சு கொடுத்துருவேன்’ என்கிற வசனங்கள் மிகவும் பிரபலமானது.

இந்த நிலையில், ஜீ தொலைக்காட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், நிகழ்ச்சிகாக காத்துக்கொண்டிருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் ஒருவர் வந்து ‘ உங்கள் மீது ஒரு முறைப்பாடு. எனவே, நீங்கள் நிகழ்ச்சியை நடத்தப்போவதில்லை’ எனக் கூற, அங்கிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் கோபத்துடன் வெளியேறுகிறார்.

 இது பிரபல்யத்துக்காக எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கும். இந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற வாய்ப்பே இல்லை பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …