குர்திஷ் மக்கள் தங்களது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலுவாக எழுப்பியிருக்கிறார்கள்.
பொது வாக்கெடுப்பில் தனிநாடு அமைய வேண்டும் என 92% மக்கள் வாக்களித்துள்ளனர்.
வடக்கு ஈராக் மாநிலமான குர்திஸ்தான் மாநில அரசு நடத்திய குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பில், அம்மாநில வாக்களர்களான 52 லட்சம் பேரில் 78% மக்கள் வாக்களித்துள்ளனர்.
அவர்களில் 92% பேர் குர்திஸ்தான் தனிநாடாக வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.
குருது மக்களின் நிலப்பகுதி துருக்கி, ஈராக், ஈரான், சிரியா, ஆர்மேனியா ஆகிய நாடுகளின் பகுதிகளில் இருக்கிறது. மொத்த மக்கள்தொகை சுமார் 4 கோடி பேர்.
இந்த பகுதிகள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு குர்திஸ்தான் உருவாக்கப்படவேண்டும் என்பது குர்து மக்களின் வேண்டுகோள் ஆகும்.
ஈராக், துருக்கி, ஈரான் நாடுகளின் கடும் எதிர்ப்பையும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி, குர்திஸ்தான் மாநில அரசு இந்த வாக்கெடுப்பை நடத்தியுள்ளது.