தமிழரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கூழ் செய்யும் முறை என்னவென்பது இளய சமுதாயத்தினரில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள், அதன் சுவை மற்றும் அதன் போசாக்கு பற்றி இளைய சமுதாயம் அறிய வேண்டுமென்பதை நோக்காகக் கொண்டு வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையினர் எதிர்வரும் சனிக்கிழமை பங்குனி 23ம் திகதி காலை 11 மணிக்கு கூழ் விற்பனை செய்யவுள்ளனர்.
கொண்டு செல்லக்கூடிய கொள்கலங்களில் இவ்விற்பனை கொழும்பு-6 இல் அமைந்துள்ள மெதடிஸ்ட் திருச்சபை மகளிர் விடுதி அமைந்துள்ள இலக்கம் 5, பொஸ்வெல்பிளேஸ், கொழும்பு -6இல் இடம் பெறவுள்ளது. (மெதடிஸ்ட் திருச்சபை தேவாலயத்தின் பின் வளாகம்) சுடச்சுட சைவ, அசைவ கூழ் பெற்றுக் கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி:011 2362467, 0718043191