Sunday , December 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கொக்காவிலில் கோர விபத்து ! நால்வர் பலி

கொக்காவிலில் கோர விபத்து ! நால்வர் பலி

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொக்காவில் பழைய முறிகண்டிப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் வாகன சாரதி உட்ப்பட நால்வர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பழுதடைந்த நிலையில் பழைய முறிகண்டிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரஊர்தியில் அதே திசையில் கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கயஸ் ரக வேன் மோதியதினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv