குற்றவாளிகள் தப்புகின்றனர்! – குமாரபுரம் படுகொலை வழக்கு குறித்து ஜெனிவாவில் அறிக்கை
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கான வாய்ப்புக்கள் இலங்கையின் நீதித்துறையில் உள்ளன என்று எடுத்துரைக்கும் அறிக்கை நேற்று ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டது. குமாரபுரம் படுகொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் தீர்ப்புக்கள் அதில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
இலங்கை மக்களின் சமத்துவ அமைப்பால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு ஐ.நாவில் முன்வைக்கப்பட்டது.
காணாமல்போனோர், தமிழர் படுகொலைகள் உள்ளிட்ட பெரியளவிலான மனித உரிமை சம்பங்களைத் தொகுத்து அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது. குமாரபுரம் படுகொலை வழங்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவத்தினர் தண்டனையிலிருந்து தப்பித்தமை குறித்து அந்த வழக்கு விசாரணையை விரிவாக எடுத்துரைத்து அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.