வடக்கில் இராணுவத்தை அதிகரியுங்கள் – கருணா
வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றுமாறு தமிழ் தரப்பினர் தொடர்ந்தும் கோரி வருகின்ற நிலையில், இரு மாகாணங்களிலும் ராணுவத்தின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்குமாறு முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு கிழக்கில் வாழும் சுமார் 14 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் கண்காணிப்பதற்கு இராணுவத்தினரையும் புலனாய்வு அதிகாரிகளையும் அரசாங்கம் மேலதிகமாக ஈடுபடுத்த வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரியிடம் கருணா எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் போராளிகளை கண்காணிக்காவிட்டால் அவர்கள் மீளவும் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதென்றும் அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையென்றும் கருணா குறிப்பிட்டுள்ளார்.