Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வொஷிங்டன் செயலமர்வில் கரு, சரா, புத்திக பங்கேற்பு!

வொஷிங்டன் செயலமர்வில் கரு, சரா, புத்திக பங்கேற்பு!

ஜனநாயக பங்கேற்றல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பை வலுவூட்டுவதில் நாடாளுமன்றத்தின் வகிபாகம் என்ற தொனிப்பொருளில் அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் விசேட செயலமர்வு நேற்று 12 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இந்தச் செயலமர்வு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த விசேட செயலமர்வில் இலங்கை, டுனீசியா, கொலம்பியா, நேபாளம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

குறித்த நாடுகள் அரசியல் ரீதியான பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் இந்தச் செயலமர்வு நடைபெறுகின்றது.

இந்தச் செயலமர்வில் இலங்கையிலிருந்து சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், புத்திக பத்திரன உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …