கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை – வெடித்தது சர்ச்சை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் புதல்வியின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள தமிழகத்தின் தி.மு. க எம் .பி கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அந்தவகையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் , கலைஞர் கருணாநிதியின் புதல்வியும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கே.கனிமொழி, இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர்களான ஈ.ரீ. முஹம்மத் பஷீர், பீ.வீ. அப்துல் வஹ்ஹாப், கே.நவாஸ்கனி, முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்ர், முன்னாள் பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் தமிழ் நாடு வக்பு சபை உறுப்பினர்ருமான பாத்திமா முஸஃப்பர், முன்னாள் இந்திய சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் , உட்பட பல்வேறு முக்கியஸ்த்தர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்நிலையில் ஈழத் தமிழர்களாகிய நாம் ஒன்றை நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டும். ஈழத்தமிழர்களிற்காக உரிமைக்குரல் கொடுப்போம் என தமிழகத்தில் அரசியவாதிகள் அந்தகாலம் தொடக்கம் இப்போதுவரை சவடால் விட்டுகொண்டிருக்கின்றார்கள். உலகளவில் தமது பெயரை காப்பாற்றிக்கொள்ளவதற்காக.
தம்மைமீறி எவரும் இலங்கைக்குள் நுழைய கூடாது என்பதில் அவர்கள் எப்பொழுதும் கவனமாகவே இருக்கின்றார்கள். ஏனெனில் அவர்களின் அரசியல் கதிரைக்கு நாம் தான் கவசம். கனிமொழியாக இருக்கட்டும் கலைஞர் கருணாநிதியாக இருக்கட்டும் ஈழத்தமிழர்களை இன்றளவும் அவர்கள் பகடைக்காய்களாகவே பயன் படுத்தி வருகின்றார்கள் என்பதுதான் உண்மை.
இலங்கையில் கடைசி போர் இடம்பெற்றபோது சரணடையுங்கள் அரசபடைகளிடம் .. நாங்கள் உங்களை பாதுகாக்கின்றோம் என கலைஞர் முதல் கனிமொழி வரை தமிழக அரசியல்வாதிகள் பலர் கூவினார்கள். ஆனால் கடையியில் நடந்தது என்ன? யாரையாவது காப்பாற்றினார்களா? இல்லையே .. பிஞ்சுகளின் ஓலங்களும் , பெண்களின் அழுகுரலும் ஒலித்துஒலித்து ஓய்துபோனதுதான் மிச்சம். கடைசிவரை தமிழ் நாடு எம்மை காப்பாற்றும் என காத்திருந்த மக்கள் மடிந்து மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்.
இவ்வாறு இலங்கையில் ஈழத்தமிழர்கள் எவ்வளவோ சொல்லொணாத துயரங்களை அனுபவித்தபோது இலங்கைக்கு கனிமொழி வரவில்லை. ஆனால் வந்தார் ஒருபொழுது.. எப்பொழுது தெரியுமா? மகிந்த பதவியில் இருந்த காலத்தில்…தமிழகத்தில் உள்ள ஏதிலிகளின் பிரதிநிதியாக… அதிலாவது ஏதாவது முன்னேற்றம் கண்டாரா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
சரி ஈழத்தில் வாழுகின்ற தமிழர்களை விடுவோம். தமிழக அகதிகள் முகாம்களில் உள்ள ஈழ ஏதிலிகளிற்கு என்ன செய்தார் இவர்? அங்குள்ள முகாம்களில் உள்ள மக்களிற்கு அதை செய்யவேண்டும் இதை செய்யவேண்டும் என மேடைகளில் முழங்குவதோடு சரி… அதனைத்தாண்டி அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க வழி அமைக்கவே இல்லை.
அரசியல் கதிரை ஒன்றையே கனவாக கொண்டுள்ள உங்களிற்கு எங்கே விளங்கப் போகின்றது முகாம்களின் இன்னல்படும் நம்மவர்கள் ஓலம்.
இன்னும் ஈழத்தமிழர்களிற்காக ஏதேனும் செய்வதாக இருந்தால் அதனை மைக் பிடித்து சொல்லாதீர்கள்.. தமிழக முகாம்களில் வாடும் எமது மக்களிற்கு செய்யுங்கள்.
எம் ஈழமண்ணிற்கு மட்டும் சுட்டெரிக்கும் சக்தியிருந்தால் உங்களைபோன்றவர்கள் காலடிபட்டவுடன் பஸ்பமாகிவிடுவீர்கள். அதனால் தானோ என்னவோ உங்கள் தந்தை கருணாநிதி நமது மண்ணில் கால்வைக்கவே இல்லை என்பது உங்களிற்கு நினைவிருக்கட்டும்…..!