கண்டி மாவட்டத்தில் நிலவிய பதற்றமான சூழல் நேற்றுமுதல் ஓரளவு சாதாரண நிலைக்குத் திருப்புள்ள போதிலும் தொடர்;ந்து ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார் அவர் மேலும் தெரிவித்தாவது,
கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்காக மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
850 இராணுவத்தினரும், 128 கடற்படையினரும், பொலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர. மேலும், 250 இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் மேலதிக படையினரை ஏனைய பகுதிகளில் இருந்து அழைக்க முடியும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் தற்போது சிறிலங்கா இராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப்படையுடன், கடற்படை மற்றும் விமானப்படையின் அணிகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.