Friday , November 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கண்டியில் கலவரம் தணிந்தது- ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது!

கண்டியில் கலவரம் தணிந்தது- ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது!

கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று (காலை) 10 மணிக்கு தளர்த்தப்பட்டுஇ மீண்டும் மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்குவரும் வகையில் நேற்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது இன்று மாலை 4 மணிவரை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால்இ தற்போது நிலைமை சுமூகமடைந்துள்ளதால் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்இ கடந்த 12 மணிநேரங்களில் எவ்வித பாரதூரமான சம்பவங்களும் இடம்பெறவில்லை எனவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தமையால் கண்டி மாவட்டம் அமைதியாகக் காணப்பட்டதுடன்இ வீதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …