Wednesday , November 20 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பொலிஸார்மீது சரமாரியாக விமர்சனம் : விசாரணை வேட்டையில் பொலிஸ் ஆணைக்குழு!

பொலிஸார்மீது சரமாரியாக விமர்சனம் : விசாரணை வேட்டையில் பொலிஸ் ஆணைக்குழு!

அம்பாறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட இன வன்முறைகளின்போது பொலிஸார் செயற்பட்டவிதம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

வன்முறைகள் வெடித்த பகுதிகளுக்கு இவ்வாரம் நேரில் பயணம் மேற்கொள்ளவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடி சாட்சியங்களைப் பதிவுசெய்யவுள்ளனர்.

அம்பாறை மற்றும் கண்டி வன்முறைகளின்போது சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்குப் பொலிஸார் தவறிவிட்டனர் என்றும், பக்கச்சார்பான முறையிலேயே அவர்கள் நடந்துகொண்டனர் என்றும் பாதிக்கப்பட்ட மக்களும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பொலிஸ்மா அதிபர் நேற்றுமுன்தினம் கண்டிக்கு பயணம் மேற்கொண்டபோதும் இதே கருத்தை மக்கள் முன்வைத்தனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பொலிஸாருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

அதேவேளை, இலங்கை பொலிஸ் கட்டமைப்பில் மறுசீரமைப்பு ஏற்படுத்தப்படும் என்று சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மேற்படி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் நேற்றுமுன்தினம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …