Friday , November 15 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / எப்போதும் மக்களே உயிர் இழக்கிறார்கள் – கமல்ஹாசன் வேதனை

எப்போதும் மக்களே உயிர் இழக்கிறார்கள் – கமல்ஹாசன் வேதனை

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர்.

அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகினர்.

இந்நிலையில், இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் அமைதியாகப் போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள். அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம். இதில் குடிமக்கள் குற்றாவாளிகள் இல்லை. அவர்கள் எப்பொழுதும் உயிர் இழக்கிறார்கள். முன்பு ஆலையினால். இப்பொழுது அரசின் ஆணையினால். அனைவரும் அமைதி காக்க வேண்டும்” என அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv