காவிரி விஷயத்திலும், ஜிஎஸ்டி விஷயத்திலும், இந்துத்துவா கொள்கைகள் விஷயத்திலும் மத்திய அரசை விமர்சனம் செய்து வந்த நடிகர் கமல்ஹாசன் இன்று மத்திய அரசை பாராட்ட விரும்புவதாகவும், குரங்கணி காட்டுத்தீ சம்பவத்தில் மத்திய அரசின் பணி பாராட்டத்தக்கது என்றும் கூறியுள்ளார்.
மேலும் நான் சொல்லும் சில விஷயங்கள் திரித்து சொல்லப்படுவதாகவும் அவர் ஊடகங்களை குற்றஞ்சாட்டினார். மேலும் ஓகி புயல் வருகிறது என்ற செய்தி வந்தபோது அதன் வானிலை அறிக்கையை சின்னதாக பெட்டி செய்தியாகவும், ஓகி வந்த பின்னர் அதன் பாதிப்பை பெரிய செய்தியாகவும் விளம்பரப்படுத்தியதாகவும் ஊடகங்களை குற்றங்கூறிய கமல்ஹாசன், தற்போது ராமேஸ்வரத்தில் புயல் வருவதாக வெளிவந்திருக்கும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஊடகங்களின் கடமை என்று கூறினார்.
இதை நான் ஏன் இப்படி சொல்கின்றேன் என்றால் நான் சொன்னல் நீங்கள் கண்டிப்பாக இந்த செய்தியை போடுவீர்கள் என்ற நம்பிக்கையில் சொல்வதாகவும் அவர் தெரிவித்தார்.