Wednesday , August 27 2025
Home / சினிமா செய்திகள் / கோடியில் புரளபோகும் ஜூலி-யின் வாழ்வ பாருங்க…

கோடியில் புரளபோகும் ஜூலி-யின் வாழ்வ பாருங்க…

பிக்பாஸ் நிகழ்ச்சியால் பெரும் பேரும் புகழும் சம்பாதித்தவர் நடிகை ஓவியா. அதேபோல அனைவரது வெறுப்பையும் சம்பாதித்தவர் ஜூலி. இவர் போல வரலாறு காணாத எதிர்மறை விமர்சனங்களை சம்பாதித்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

ஆனாலும் அத்தனை எதிர்மறை விமர்சனங்களையும் தாங்கி கொண்டு இன்னும் கெத்தாகத்தான் இருக்கிறார் ஜூலி.

பிக்பாசில் கலந்து கொண்டவர்களில் ஓவியாவை தவிர வேறு யாருக்கும் சினிமா வாய்ப்புகளோ, விளம்பர வாய்ப்புகளோ வந்ததாக தெரியவில்லை.

ஆனால் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் ஜூலிக்கு சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

குறிப்பாக விஜய் டிவி அவருக்கு பெரிய ஒரு பிளாட்பாரம் அமைத்து கொடுக்க முடிவு செய்துள்ளது. அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

மேலும் பல்வேறு தனியர் தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார். இதற்கெல்லாம் ரூ 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் கேட்கிறார்.

ஆனாலும் அவர் கேட்கிற தொகையை கொடுக்க தனியார் தொலைக்காட்சிகள் தயாராக உள்ளன. இதனால் ஜூலியின் காட்டில் அடைமழை பெய்து வருகிறது. கோடிகளில் புரள தயாராக உள்ளார்.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …