நாட்டின் முக்கிய உளவு பிரிவு துறையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பெண் போலீசார் ஒருவர் நியமிப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்ஸ்பெக்டர் மட்டத்திலான பதவி வகித்து வருபவர் சக்தி சர்மா. ஜம்மு மற்றும் காஷ்மீரில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக இருக்கும் இவர் நாட்டின் முக்கிய உளவு பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு கவுரவமிக்க மற்றும் மதிப்பு வாய்ந்த துறையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள முதல் பெண் இவராவார். அடுத்த வாரம் தனது புதிய பணியில் அந்த பெண் அதிகாரி இணைய உள்ளார்.
ஐ.நா. சபையின் அமைதி படையிலும் பணியாற்றியுள்ள சக்தி சிறந்த அதிகாரிக்கான விருதினையும் பெற்றுள்ளார்.




