மோசடிகளை மறைக்க ரணில், ராஜபக்ஷக்கள் இரகசிய கூட்டு சேர்ந்துள்ளனர்
ராஜபக்சக்கள் மற்றும் ரணில் தரப்பினர் தமது மோசடிகளை மறைப்பதற்காக இரகசிய கூட்டு சேர்ந்துள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் புளத்சிங்கள தொகுதி அமைப்பாளர் ஜகத் விதான தெரிவித்துள்ளார்.
மத்துகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
பிணை முறி மோசடியாளர்களை கைது செய்வதாகக் கூறி ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கம் இன்னும் அதனை செய்யவில்லை. கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா நிவாரண கொடுப்பனவும் அரசியல் மயப்படுத்தப்பட்டது.
தற்போது பிரதேச செயலாளர்கள் , மாவட்ட அதிபர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். அரச நிர்வாக அதிகாரிகள் அவர்களுக்கு கீழ் திக்கற்றுப் போயுள்ளனர்.
ராஜபக்சக்கள் மற்றும் மஹிந்த தரப்பினர் இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்து ஜனநாயகத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளனர் என்றார்.
பயனுள்ள இணைப்புகள் இங்கே




