Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / க.பொ.த சாதாரணதரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினைகளை உடன் அறிவிக்கலாம்

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினைகளை உடன் அறிவிக்கலாம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் தொடர்பிலான பிரச்சினைகளை 1911 என்ற தொலைபெசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை பரீட்சாரத்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் பாடசாலை அதிபருக்கும், தனியாருக்கான அனுமதிப்பத்திரங்கள் பரீட்சாரத்திகளின் விலாசத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

4 29, 493 பாடசாலை பரீட்சாரத்திகளும், 259,080 தனியார் பரீட்சாத்திகளும் இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.

இதன்பிரகாரம் 688,573 பேர் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ளனர்.

கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப்பரீட்சை இம்மாதம் 12 அம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …