ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா – மோடி பேச்சு
யோகா மூலம் புதிய யுகத்தை உருவாக்குவோம் என பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் உலகத்தின் 70 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்று தொடங்கி மார்ச் 7 வரை இந்த விழா நடைபெறுகிறது.
இதில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தீவிரவாதம், பருவநிலை மாற்றம் ஆகியவை உலகை இன்று பயங்கரமாக அச்சுறுத்திக் கொண்டுள்ளன. நாடுகளுக்கிடையே அமைதியை நிலை நாட்ட வேண்டும். தனி நபர், குடும்பம், சமூகம் மற்றும் நாடுகளுக்கிடையே அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை யோகாவின் மூலம் கொண்டுவர முடியும்.
யோகா தனிப்பட்ட மனிதனின் சிந்தனை, செயல், அறிவு ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டுவந்து அவனை சிறந்த மனிதனாக மாற்றுகிறது. யோகாவை பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம் என்பதற்கு போதுமான ஆதாரம் உள்ளது. யோகா மூலம் அமைதி, நல்லிணக்கத்துடன் கூடிய புதிய யுகத்தை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.