மேஷம்
மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப் படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். கனவு நனவாகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப் பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புதிய சலுகை கள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.
மிதுனம்
மிதுனம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கடகம்
கடகம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். முகப் பொலிவுக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
சிம்மம்
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மகம் நட்சத்திரக்காரர் களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோ கத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
கன்னி
கன்னி: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
துலாம்
துலாம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். பிள்ளைகளின் பொறுப்பு ணர்வை பாராட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபா ரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சகோதரர்களால் பயனடை வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.
தனுசு
தனுசு: கடந்த இரண்டு நாட் களாக கணவன்-மனைவிக் குள் இருந்த மனப் போர் நீங்கும். உறவினர்கள் உதவுவார்கள். புதியவர்கள் அறி முகமாவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
மகரம்
மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
கும்பம்
கும்பம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
மீனம்
மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். திடீர் யோகம் கிட்டும் நாள்