அமெரிக்கர்களை பணியில் அமர்த்த எச்-1பி விசா மூலம் பணியமர்த்துவதை இந்திய கம்பெனிகள் நிறுத்த வேண்டும் – நாராயணமூர்த்தி
அமெரிக்கர்களை பணியில் அமர்த்த எச்-1பி விசா மூலம் பணியமர்த்துவதை இந்திய கம்பெனிகள் நிறுத்த வேண்டும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
அமெரிக்க புதிய அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் எச்-1 பி விசாவில் அதிரடி மாற்றம் செய்துள்ளது. அதன்படி எச்-1 பி விசாவில் பணி அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு ஐ.டி. நிறுவனங்கள் 60 ஆயிரம் டாலரில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் டாலராக அதாவது 2 மடங்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.
அதற்கான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் பணிபுரிய வேண்டும் என்ற கனவில் இருக்கும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் பணி புரிபவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர்.
அதிக சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் அமெரிக்க ஐ.டி. நிறுவனங்கள் வெளிநாட்டினரை பணியில் அமர்த்த தயங்கு நிலை உள்ளது.
இதுகுறித்து இன்போசிஸ் கம்பெனியின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.
“வெளிநாட்டு ஊழியர்கள் பணி நியமனம் செய்வதை தடுக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் புதிய நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. எனவே இந்திய கம்ப்யூட்டர் நிறுவனங்கள் அமெரிக்காவில் அமெரிக்கர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.
அதுபோல் கனடாவில் கனடாக்காரர்களையும், இங்கிலாந்தில் அதே நாட்டினரையும் பணி அமர்த்த வேண்டும். அதுவே நாம் உண்மையான பன்னாட்டு நிறுவனம் ஆக ஒரே வழியாகும். மேலும் நாம் எச்-1 பி விசா பயன்படுத்துவதையும், அதன் மூலம் அதிக அளவில் இந்தியர்களை பணிக்கு அனுப்புவதையும் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.