இந்தியா ரகசிய அணு ஆயுத நகரம் உருவாக்கி வருகிறது – பாகிஸ்தான் அலறல்
இந்தியா ரகசிய அணு ஆயுத நகரம் உருவாக்குவதாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் நபீஸ் ஷகாரியா கூறியுள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் நபீஸ் ஷகாரியா ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
இந்தியா ரகசிய அணு ஆயுத நகரம் உருவாக்கி வருகிறது. அதன் மூலம் அணு ஆயுதங்களை திரட்டி சேகரித்து வைத்துள்ளது. இதனால் இப்பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் ஏவுகணைகளை இந்தியா பரிசோதித்துள்ளது. இதுவும் இப்பகுதியில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியுள்ளது. இதை சர்வதேச சமூதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்துள்ளது. மேலும் அமைதி நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிக்கு இந்தியா பரஸ்பர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்லுறவையும், அமைதியையும் மட்டுமே பாகிஸ்தான் விரும்புகிறது. பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்கவே பாகிஸ்தான் விளைகிறது. அதை விடுத்து இந்தியா பகைமை உணர்வுடன் செயல்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.