Wednesday , February 5 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / சுதந்திர தின விழா ஒத்திகை

சுதந்திர தின விழா ஒத்திகை

சுதந்திர தினவிழாவையொட்டி தலைநகர் டெல்லியில் முழு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

டெல்லி ராஜபாதையில் நடைபெறவுள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும், முழுச் சீருடை அணிந்த பாதுகாப்புப் படையினர் நடத்திப் பார்த்தனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம்‌, குடியரசுத் தலைவர் மாளிகை, செங்கோட்டை, தூதரகங்கள் உள்ளி்ட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் உள்ளனர். சென்னை விமான நிலையம் 7 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய நபர்களை கண்டாலோ அல்லது சந்தேகமான பொருட்களை பொது இடங்களில் கண்டாலோ உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Check Also

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய …