Wednesday , October 15 2025
Home / சினிமா செய்திகள் / விளம்பரத்தில் நடிக்கும் ஜூலி; வைரலாகும் வீடியோ

விளம்பரத்தில் நடிக்கும் ஜூலி; வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சினிமா பிரபலம் அல்லாதவர் ஜூலி மட்டும்தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு ஜூலி வெகுவாக பிரபலமடைந்தாலும், அவர் செய்த சில விஷயங்களால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார்.

ஜூலிக்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக கமல்ஹாசனே, அவரது தங்கை எனச் சொல்லி வெளியே அனுப்பி வைத்தார். இப்போது ஜூலி கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா என்ற குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.

பின்னர் சமூக வலைதளங்களில் ஜூலியின் கழுத்தில் ஒருவர் கத்தி வைத்திருப்பது போன்ற புகைப்படம் வைரலானது. அதில் பிரபல விளம்பர பட இயக்குநர் பாபா பகுர்தீன்தான் அது. ராமநாதபுரம் இலாஹி ஷாப்பிங் மாலுக்காக அவர் இயக்கிய விளம்பர வீடியோவில் ஜூலி நடிப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ஜுலி மெல்ல திரையுலகத்திலும் காலடி எடுத்து வைத்துள்ளார். ஜூலி விமலின் மன்னர் வகையறா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படம் தொடர்பான புகைப்படம் வெளியான பிறகே ஜூலி நடிப்பது தெரிய வந்தது.

தற்போது ஒரு அப்பளம் விளம்பரத்தில் இவர் நடித்துள்ளார். இந்த வீடியோவை அவரே ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/twitter/statuses/944424239146270720

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …