தாய், சித்தப்பா மற்றும் சித்தியுடன் வாவியில் நீராடிக் கொண்டிருந்த 13 வயதுச் சிறுமி முதலையால் கடித்து இழுத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிந்துள்ள பரிதாப சம்பவம கல்நேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மூலங்கமுவ வாவியிலிருந்து வரும் ஓடையொன்றில் நேற்றுமுன்தினம் நீராடிக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனக் கல்நேவ பொலிஸார் தெரிவித்தனர்.
கல்நேவ, லோலுகஸ்வெவ கிராமத்தைச் சேர்ந்த எஸ்.எம்.ஹிமிஹாமினி அனுஷிகா எனும் 13 வயதுச் சிறுமியே இந்தச் சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
பொலிஸாரும் கடற்படையினரும் பிரதேசவாசிகளும் இணைந்து வாவியில் மேற்கொண்ட தீவிர தேடுதலின் பின்னர் குறித்த முதலை நேற்றுப் பிடிக்கப்பட்டது.
இதையடுத்து, முதலையின் வயிற்றுப்பகுதியில் சிறுமியின் சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டது. உடனே முதலையின் வயிற்றுப்பகுதி வெட்டப்பட்டு சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது எனக் கல்நேவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
முதலைக்கு இரையான சிறுமியின் பிறந்த தினம் எதிர்வரும் 2 ஆம் திகதி கொண்டாடப்பட இருந்தது என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.