“நாட்டில் முப்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் இயங்குகின்றன. வாகன நெரிசலுக்கும் அதிகமான விபத்துக்களுக்கும் முச்சக்கர வண்டிகளே காரணம். இவற்றைத் தடுப்பதற்கான முயற்சியாக, இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி நிதியமைச்சிடம் கேட்டிருக்கிறேன்.
“மேலும், முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தத் தடை விதிக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
“பொதுப் போக்குவரத்தைச் சீரமைக்கும் வகையில், வெகு விரைவில் மின்சாரப் பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு பயன்பாட்டில் விடப்படும்.”
இவ்வாறு அமைச்சர் கூறினார்.