நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“விஜயதாஸ ராஜபக்ஷ ஊழல்வாதிகளையும், மோசடியாளர்களையும் காப்பாற்றிவருகின்றார். குற்றம் செய்தவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவருவதற்குத் தடையாக இருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் ஆளாகியிருக்கின்றார். அவர் இந்தப் பதவியைவிட்டு விலகினால் மட்டுமே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தமுடியும். எனவே, அவருக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் தனது பதவியை உடனடியாக இராஜிநாமா செய்யவேண்டும்” – என்று கூறியுள்ளார்.