தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பிலான கோரிக்கை கடிதம் ஒன்றை அவர் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர், முன்னாள் முதலமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும், தனது பாதுகாப்பு தொடர்பில் தான் கடிதம் அனுப்பியும் இதுவரை எவ்வித பதிலும் இல்லலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.