Sunday , August 24 2025
Home / சினிமா செய்திகள் / ஓவியாவை பார்த்து மாறிவிட்டேன்

ஓவியாவை பார்த்து மாறிவிட்டேன்

“அடியே அழகே… என் அழகே அடியே…” என்ற ஒற்றை பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ் தான். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான பொதுவாக என் மனசு தங்கம் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிவேதா பெத்துராஜ், பிக்பாஸ் வீட்டில் ஓவியாவை பார்த்ததிலிருந்து தனது மனப்பான்மையை மாற்றிவிட்டதாக கூறியுள்ளார். “பொதுவாக எப்போதுமே என்னை சுற்றி நடக்கும் அநியாயங்களை தைரியமாக தட்டிக் கேட்பவள் தான் நான். ஆனால் பிக்பாஸ் வீட்டில் அடுத்தவர் பற்றி புரளி பேசாமல், அநியாயங்களை தட்டிக் கேட்ட ஓவியாவிற்கு என்ன நடந்தது என்பதை பார்த்தேன். அதிலிருந்து எனது அணுகுமுறையை மாற்றிவிட்டேன். நான் ஓவியாவின் தீவிர ரசிகை” எனது கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீஸன் 2-வில் நீங்கள் பங்கேற்பீர்களா எனக் கேட்டதற்கு, நிச்சயம் பங்கேற்கமாட்டேன் என கூறியுள்ளார்.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …