மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை குறித்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 2945 மில்லியன் பெறுமதியான 294 கிலோ 490 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இதற்கு பாராட்டு தெரிவித்தே ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்ட வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.