கனமழை மூழ்கும் அபாயத்தில் இலங்கை நாடாளுமன்றம்!
நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடா்ச்சியான கனமழைகாரணமாக இலங்கை நாடாளுமன்றம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சாிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வருவதோடு பெய்யும் கடும் மழையால் மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு வெள்ள அனர்த்தங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தைச் சுற்ற உள்ள தியவன்னா குளம் தற்போது வெள்ளநீரில் நிரம்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்றம் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளபோதும், வெள்ளநீர் நாடாளுமன்றத்திற்குள் வராதபடிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.