Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு!!

ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு!!

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார்.

அதன்படி இந்த வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சு கடந்த வாரம் அறிவித்திருந்தது.

ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜீ.எஸ்.பி) 2017 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகிய நிலையில், அதன் மீள் அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கவில்லை.

இதன் விளைவாக ஜீ.எஸ்.பி கடந்த 2017 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியதால், இலங்கை மற்றும் ஜீ.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கு ஜனவரி 1, 2018 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் மீண்டும் அந்த வரிச் சலுகையை வழங்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv