Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அரசாங்கம் கோத்தபாயவை கைது செய்ய முயற்சி!

அரசாங்கம் கோத்தபாயவை கைது செய்ய முயற்சி!

அரசாங்கம் கோத்தபாயவை கைது செய்ய முயற்சி!

ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன் கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய அரசாங்கம் தற்போது பல முயற்சிகளை மேற்கொள்கின்றதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சட்டத்தை தனது தேவைக்கேற்ப உருவாக்க முடியும் என்று குறிப்பிடும் சட்டமா அதிபர் திணைக்கள சொலிஸ்டர் ஜனரால் தில்ருக்ஷி டயஸ் விக்ரமரத்ன பதவி விலக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான பலமான அரசாங்கம் இன்னும் இரு மாத காலத்திற்குள் தோற்றம் பெறும் என்றும், அதற்காக பெரமுன தற்போது தேர்தலின் வெற்றியை இலக்காகக் கொண்டு செயற்திட்டங்களை நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சார்பில் கட்டுப்பணத்தினையு செலுத்தியுள்ளதாக கூறிய விமல், இதுவரையில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் முறையாக தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv