பாட்டாளி சம்பிகவிற்கு கோத்தா அழைப்பு
ஜாதிக ஹெல உரிமை தலைவர் பாட்டளி சம்பிக ரணவக்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தம்முடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பிக ரணவக்கவின் கொள்கைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிறந்த இடம் என்றும் பெரமுன் கூறியுள்ளது.
அத்துடன் சம்பிக ரணவக்க தற்போது வகிக்கும் மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பதவியை எந்த மாற்றமும் இன்றி வழங்கி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தற்போது அமைச்சகம் திட்டமிட்டுள்ள எந்தவொரு திட்டத்தையும் மாற்ற மாட்டோம் எனவும் உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
மேலும் கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது சம்பிக ரணவக்க எதிர்கொண்ட கஷ்டங்களை கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் ஏற்படாது எனவும் பெரமுன உறுதியளித்துள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
இதேவேளை இதற்கு கடினமான எதிர்ப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதால் பிவிதுரு ஹெல உரிமை தலைவர் உதய கம்மன்பிலவுக்கு அறிவிக்காமல் ரகசியமான முறையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இருப்பினும், இந்த திட்டத்தை சம்பிக ரணவக்க ஏற்கவில்லை அல்லது நிராகரிக்கவில்லை என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதேவேளை 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட வெற்றிகரமான பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்க திட்டமிட்டுள்ள ரணவக்க, இந்த நேரத்தில் ஐக்கிய தேசிய முன்னணியை விட்டு வெளியேற மாட்டார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.