யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை ஏற்றம் !
யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பெப்.10) திங்கட்கிழமை பவுணுக்கு 200 ரூபாயால் உயர்வடைந்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் என்ற செய்தி வெளியானதால் ஜனவரியில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன் பின் லேசாக குறைந்த தங்கத்தின் விலை இப்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகமாகி வருவதும் முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதுமே என சொல்லப்படுகிறது.
இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று (பெப். 10) திங்கட்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை 70 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றுமுன்தினம் ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 70 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தூய தங்கத்தின் விலை!
24 கரட் தூய தங்கத்தின் விலை பவுண் ஒன்று 77 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றுமுன்தினம் சனிக்கிழமை 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுண் ஒன்று 77 ஆயிரம் ரூபாயாகக் காணப்பட்டது.