Monday , December 23 2024
Home / முக்கிய செய்திகள் / தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி ராக்கி என்ற வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். 2 மணி நேரத்திற்கு மேல் செல்போன் கோபுரத்தின் மீது இருந்த அந்த இளைஞர் பேஸ்புக் மூலம் தனது மிரட்டல் காட்சியை நேரலை செய்தார்.தற்கொலை மிரட்டல் விடுத்த ராக்கி பிளேடால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு வந்த போலீசார் அவருடன் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தற்கொலை மிரட்டல் விடுத்த ராக்கி கீழே இறங்கினார்.பிறகுபோலீசார் பத்திரமாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்,

விசாரணையில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதா மரணத்திற்கு நீதி கேட்க நீ என்ன செய்தாய் என தனது காதலி கேட்டதாகவும் அதனால் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கூறினார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv