Thursday , November 21 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தல்! அரசு முடிவு

ஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தல்! அரசு முடிவு

ஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தல்! அரசு முடிவு

ஏப்ரல் மாதம் 25ம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதென அரசாங்க வட்டாரங்கள் தீர்மானித்துள்ளன. தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான சந்திப்பிலும் இது உறுதியாகியுள்ளது.

இதன்படி, மார்ச் 2ம் திகதி நள்ளிரவிற்கு பின்னர் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பார். மார்ச் 12 முதல் 19ம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும்.

முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ழான், பௌத்தர்களின் வெசாக் பண்டிகைகளிற்கு இடையில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம் மே மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமையினால் அதனை பெற்றுக்கொள்ள பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற ஆயுட்காலத்திற்கு முன்னர் கலைக்கப்படுவதால் 60 உறுப்பினர்கள் பெரும் கவலையில் உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv