முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத் தில் சந்தைத்தொகுதி மற்றும் உணவகங்களில் கும்பல் ஒன்று கள்ளநோட்டுக்களை கொடுத்து வணிகர்களை ஏமாற்றியுள்ளது.
புதுக்குடியிருப்புச் சந்தைப்பகுதியில் நேற்று நண்பகல் தூள்வியாபாரம் செய்யும் வயோதிபப் பெண் ஒருவரிடமும், மட்பாண்டங்கள் வியாபாரம் செய்யும் பெண் ஒருவரிடமும், பழவியாபாரம் செய்யும் பெண் ஒருவரிடமும் இந்த மோசடி கும்பல் ஆயிரம் ரூபா தாள்களைக் கொடுத்து சிறுதொகையில் பொருள்களை கொள்வனவு செய்து மீதிப்பணத்தை பெற்றுக்கொண்டது.
அத்துடன் புடவைக் கடை கள் மற்றும் பான்சிகடைகளிலும் இதே விதமாக பொருள்களைக் கொள்வனவு செய்தது குழு.
இதேவேளை புதுக்குடியிருப்புச் சந்திப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலும் இதே சம்பவம் நேற்று இன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்ட கள்ள நோட்டுக்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியில் மக்கள் அச்சமடைந்துள்ளார்கள். இந்தக் கும்பல் தொடர்பில் புதுக்குடி யிருப்பு வணிகர் சங்கத் தலைவர் சந்திரன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டது.