வடக்கு மாகாணத்தில் 273 விவசாயக் கிணறுகளை புனரமைப்பதற்காக 100 விவசாயிகளுக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாயத் திணைக்களத்தில் நேற்று மாலை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
50 ஆயிரம் ரூபா தொடக்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை மதிப்பீட்டுக்கு அமைவாக 273 விவசாயக் கிணறுகளைச் சீரமைக்க 100 விவசாயிகளுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், ஜெயசேகரம், கஜதீபன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் ஆகியோருடன் விவசாயிகளும் கலந்துகொண்டனர்.