கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரையான காலப்பகுதியில் குழந்தை பிரசவித் தவர்களின் விவரத்தை பங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கோரியுள்ளனர்.
மருத்துவமனையிலும், வீடுகளிலும் குழந்தை பிரசவித்தவர்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளன என்று அறிய முடிகின்றது. அதற்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.திருவாகரனைத் தொடர்புகொண்டு கேட்டோம்.
‘குழந்த பிரசவித்தவர்களின் விவரங்களைப் பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினர் கோரியுள்ளமை தொடர்பில் அமைச்சுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அதை வழங்குவதற்கு எமக்கு அனுமதியில்லை. கொழும்பு சுகாதார அமைச்சுக்கு இந்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளோம். அவர்கள் அனுமதித்தால் தகவல் வழங்குவோம்’ என்று அவர் தெரிவித்தார்.