Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மாண­வர்­க­ளுக்கு இல­வச போக்­கு­வ­ரத்து.!

மாண­வர்­க­ளுக்கு இல­வச போக்­கு­வ­ரத்து.!

புகை­யி­ரத சேவை ஊழி­யர்­களின் பணி பகிஷ்­க­ரிப்பு தொடர்ந்தும் நீடித்தால் புகை­யி­ரத பரு­வ­கால சீட்­டுக்­களை வைத்­தி­ருக்கும் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு தனியார் பேருந்­து­களில் இல­வச போக்­கு­வ­ரத்து சேவையை வழங்க தீர்­மா­னித்­துள்­ள­தாக தனியார் பேருந்து உரி­மை­யாளர் சங்கம் தெரி­வித்­துள்­ளது.

புகை­யி­ரத தொழிற்சங்­கங்கள் மேற்­கொண்­டுள்ள பணி பகிஷ்­க­ரிப்பு தொடர்ந்தும் இடம்­பெ­று­மானால் புகை­யி­ரத பரு­வ­கால சீட்­டுக்­களை வைத்­தி­ருக்கும் மாண­வர்­க­ளுக்கு தனியார் பேருந்­து­களில் இல­வ­ச­மாகச் செல்ல சந்­தர்ப்பம் அளிக்­கப்­படும் என இலங்கை தனியார் பேருந்து உரி­மை­யாளர் சங்க தலைவர் கெமுனு விஜே­ரத்ன நேற்று முன்­தினம் தனியார் பேருந்து உரி­மை­யாளர் சங்கம் ஏற்­பாடு செய்­தி­ருந்த செய்­தி­யா­ளர்­ சந்­திப்பின் போதே இதனைத் தெரி­வித்தார்.

புகை­யி­ரத சீட்டினை வைத்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இச் சலுகை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …