Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது: சரத் பொன்சேகா

தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது: சரத் பொன்சேகா

இறந்தவர்களை நினைவு கூரவும் அஞ்சலி செலுத்தவும் தீபம் ஏற்றவும் எவருக்கும் முடியும் என முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாளை முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு குறித்து கேட்டபோதே சரத்பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சிவாஜிலிங்கம் பிரபாகரனின் இரத்த உறவினர் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் யுத்த காலத்தில் அவ்வாறு இனங்காணப்படவில்லை எனத் தெரிவித்த சரத்பொன்சேகா யுத்தத்தின் போது உயிரிழந்த எந்தவொருவரையும் அவரது உறவினர்கள் நினைவு கூர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், சிவாஜிலிங்கம் பலம்மிக்க ஒருவர் இல்லை எனவும், அது குறித்து கவனம் செலுத்தி காலத்தை செலவிடுவது அர்த்தமற்ற வேலை எனவும் தெரிவித்துள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …