சீனாவில் உள்ள மசாஜ் பார்லரில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பலி
சீனாவில் ஷிஜியாங் மாகாணம் தியான்டை பகுதியில் உள்ள ஷுஸிங்டாக் என்ற இடத்தில் ஒரு மசாஜ் பார்லரில் ஏற்பட்ட தீ விபத்தில் தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பலியாகினர்.
சீனாவில் ஷிஜியாங் மாகாணம் தியான்டை பகுதியில் உள்ள ஷுஸிங்டாக் என்ற இடத்தில் ஒரு மசாஜ் பார்லர் உள்ளது. நேற்று மாலை அங்கு திடீரென தீப்பிடித்தது. உடனே அங்கு பணியில் இருந்தவர்களும், வாடிக்கையாளர்களும் கண்ணாடி ஜன்னல்கள் வழியாக வெளியே குதித்து தப்பி ஓடினர். இருந்தும் இந்த தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பலியாகினர்.
மேலும் 18 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு தியான்ஜின் நகரில் சாயபட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 114 பேர் பலியாகினர்.




